டி20 உலகக் கிண்ணத்திலிருந்து நரேன், பொல்லார்ட் விலகல்

ஜமைக்கா: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெஸ்ட் இண்டீசின் சுனில் நரேனும் பொல்லார்ட்டும் விலகியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் வீரர்களுக்கும் இடையே சம்பள ஒப்பந்தம் குறித்த பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. டி20 உலக கிண்ணப் போட்டியில் விளையாடும் வீரர்களின் சம்பளத்தை அதிக அளவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளது.

இந்நிலையில், காயம் காரணமாக பொல்லார்ட் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கெடுக்கமாட்டார் என்று வாரியம் தெரிவித்தது. பந்தை எறிகிறார் என்பதற்காகத் தடை விதிக்கப்பட்ட நரேனுக்குப் பந்துவீச்சு முறையை சரிசெய்ய கூடுதல் அவகாசம் தேவை என்பதற்காக உலகக் கிண்ணப் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை என்று வாரியம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!