மதுக்கடைகள் இனி மாலை முதல் இரவு வரை மட்டுமே இயங்கும்: அரசு திட்டம்

சென்னை: மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை தமிழக அரசு குறைக்க உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காலை முதல் இரவு வரை இயங்கி வரும் மதுக்கடைகளை இனிமேல் மாலை 4 முதல் 10 மணி வரை மட்டுமே திறந்து வைக்க அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. எனவே அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் மதுக்கடைகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் முதல் தேதியில் இருந்து அது நடைமுறைப் படுத்தப்படும் என அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இந்நடவடிக்கை அதிமுகவின் தேர்தல் பிரசாரத்துக்கு கைகொடுக்கக் கூடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!