தூது வந்த முன்னாள் அமைச்சர்; சந்திக்க மறுத்த விஜயகாந்த்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத் தும் பொருட்டு தன்னைச் சந்திக்க வந்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை, தேமு திக தலைவர் விஜயகாந்த் சந் திக்க மறுத்து திருப்பி அனுப்பி யதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்தின் இந்தச் செயல்பாடு திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவையும் தங் களது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக உள்ளது. அதிமுக அரசு மீதான அதிருப்தி வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ப தற்காகவே திமுக தலைமை இந்தக் கூட்டணிக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பொதுவெளியில் திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல்,

இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என தேமுதிகவின் இதர நிர்வாகிகளும் ஆங்காங்கே நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைமையை சமாதானப்படுத் தும் முயற்சியை தொடங்கியுள் ளது திமுக தலைமை. முதற்கட்டமாக அண்மையில் திமுக அனுதாபியான மருத்துவர் ஒருவர், விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இவர் விஜயகாந்துக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சம்பந்தியும் கூட. இந்நிலையில் விஜயகாந்தை சந்திக்க பொன்முடியும் அண்மையில் நேரில் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் மருத்துவரை தன்னுடன் பேச அனுமதித்த விஜயகாந்த், திமுக சார்பில் தூதராக வந்த பொன் முடியை மட்டும் நேரில் சந்திக் காமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!