அன்பின் வழியது உயிர்நிலை

முகம்மது ஃபைரோஸ்

தெளிவாகப் பேசினாலும் சில நேரங்களில் பிழையாகப் புரிந்து கொள்வது மனித இயல்பு. எவ்வளவு அன்பான கணவன்= மனைவியாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்ற குறளை தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் ரவிச்சந்திரன்- சுமதி தம்பதி. காது கேளாத, வாய் பேச முடியாத மனைவியுடன் கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக குடும்பம் நடத்தி வருகிறார் திரு ரவிச்சந்திரன், 49. காதலுக்கு உடற்குறை ஒரு தடையல்ல என்று திடமாக நம்பி சுமதியைக் கரம்பிடித்த திரு ரவி, தமது உறுதியான காதலைப் பற்றி மனம் திறந்து பேசினார். 1991ஆம் ஆண்டு, சுமதியை ரவி முதன்முதலில் சந்தித்தது அவர்கள் பணிபுரிந்த நிறுவனத் தில்தான். அங்கு வர்த்தகப் பிரிவில் சுமதியும் மின்னியல் சாதனப் பிரிவில் ரவியும் வேலை செய்தனர். சுமதி பிறவியிலிருந்தே பேச முடியாதவர். அவருக்குக் காதும் கேட்காது. ஆனால் வாய் அசைவை வைத்து புரிந்து கொள்வதில் திறமைசாலி என்றார் திரு ரவி.

"சுமதியை முதன்முதலில் பார்த்ததும் அவரது அமைதியான குணம் எனக்கு மிகவும் பிடித் திருந்தது. அவரது உற்ற தோழ னான பின்பு அவர் உடற்குறையை நான் ஒரு பொருட்டாகக் கருத வில்லை," என்றார் இவர். நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த தால் சிற்றுண்டிச் சாலைக்கு ஒன் றாகச் சென்று, வேலை முடிந்து சற்று நேரம் அளவளாவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். சுமதியுடன் பழகிய குறுகிய காலத்திலேயே அவரைத்தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்று ரவி தீர்மானித்தார். திருமணம் முடிந்து கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது மூன்று பிள்ளைகளுக் கும் பெற்றோராகிவிட்டனர். "சுமதியைச் சந்தித்த முதல் ஆண்டு அன்பர் தினத்தன்று எங்கள் திருமணத்திற்காக போரா டிக் கொண்டிருந்தேன். நான் வருத்தப்பட்டாலும் என் காதலி அந்த நாளன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் படிக்கும் இரவுப் பள்ளிக்குச் சென்று காத்திருந்தேன்," என்று நினைவுகூர்ந்தார் ரவி. அன்று சுமதியிடம், "உன்னுடன் நான் இருப்பேன்," என்று உறுதி கூறிய ரவி, இன்று அந்த வாக் குறுதியைக் காப்பாற்றிவிட்டார்.

இன்றுவரை இருவரது குடும்பங் களும் இணக்கமாகவே உள்ளன. "என்னைப் பற்றிக் கவலைப் படாமல் என்னுடைய பிள்ளைகள் மூவரும் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே எங்கள் இருவரது கனவு," என்று சுமதி சைகை மூலம் கூறினார். மகிழ்ச்சியான மணவாழ்க்கை பற்றிக் கேட்டதற்கு, "நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரி யாதை வைத்திருக்கிறோம். அன்பு, பாசம், காதல்தான் எங்களுக்கு வாழ்க்கை. அவ்வப்போது எங்க ளுக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம். ஆனால், விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக்கொண் டால் திருமண வாழ்க்கை இனி தாக அமையும்," என்றார் ரவி.

கல்லூரியில் படிக்கும் மகள் ரதி, 21 (வலது), தொடக்கக் கல்லூரியில் படிக்கும் ரமணா, 17 (வலமிருந்து 2வது), உயர்நிலை முதல் வகுப்பில் படிக்கும் ரி‌ஷி, 13 (இடது), என மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாய் வாழும் காதல் தம்பதி ரவிச்சந்திரன்-சுமதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!