திருமணமான பின்பும் கடுகளவும் காதல் குன்றாத பிரபல ஜோடிகள்

மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம் என்று இன்றைய அன்பர் தினத்தைக் கொண்டாட இவ்வுலகமே காத்துக் கொண்டுள்ளது. அவ்வகையில் இளம் நெஞ்சங்களின் மனதில் காதலை உரம்போட்டு தீவிரமாக வளர்க்க பிரபல நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

காதலித்த போதும் சரி; காதலுக்குப் பின் தொடரும் திருமண வாழ்க் கையிலும் சரி; மற்ற இளம் ஜோடி களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருவதுதான் இந்த பிர பல ஜோடிகளின் தனிச்சிறப்பாகும். தமிழ்ச் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒரு வரான பொன்வண்ணன், "என் வாழ்க்கை முழுவதும் உங்களு டைய கால்‌ஷீட் வேண்டும்," என்று சரண்யாவிடம் இயல்பாக தனது காதலை வெளிப்படுத்தியவர். 1995ஆம் ஆண்டில் பொன் வண்ணன்=சரண்யா காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது. இவர்களின் இனிய காதல் வாழ்க்கைக்கு அடையாள மாக இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 21 ஆண்டுத் திருமண வாழ்க்கையில் இன்று வரை எவ் வித வதந்தி, வீண் சச்சரவுகளும் இவர்களைப் பற்றி வந்ததில்லை.

அஜித்=ஷாலினி தம்பதியைப் பற்றி பெரிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. 'அமர்க்களம்' படத்தில் நடித்தபோது அஜித், ஷாலினியிடம் காதலை வெளிப் படுத்த, மத வேற்றுமைகளை பொருட்படுத்தாத இவர்களது காதல் இரண்டாம் ஆண்டில் திரு மணத்தில் முடிந்தது. 15 ஆண்டு வெற்றிகரமான காதல் வாழ்க் கைக்கு அடையாளமாக அனௌஷ்கா, ஆத்விக் என்று இரு குழந்தைகள் உள்ளனர். 'பூவெல்லாம் கேட்டுப் பார்', 'உயிரிலே கலந்தது', 'மாயாவி', 'காக்க காக்க', 'பேரழகன்', 'ஜூன் ஆர்', 'சில்லுன்னு ஒரு காதல்' என்று ஏழு படங்களில் சேர்ந்து நடித்த சூர்யா-ஜோதி காவின் காதலைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே இல்லை. அந்த அளவிற்கு உருகி உருகிக் காத லித்த இருவரும் 2006ல் திருமணம் செய்துகொண்டனர். 9 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு அடையாளமாகத் தியா, தேவ் என்று இரு குழந்தைகள் உள்ள னர். தற்போது ஜோதிகா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

புன்னகை இளவரசி என்று புகழப்படும் சினேகாவிடம் எத்த னையோ பேர் காதலைச் சொன் னாலும் அவர் தேர்ந்தெடுத்தது என்னவோ பிரசன்னாவைத்தான். அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடித்தபோது மலர்ந்த பிரசன்னா-சினேகா காதல் 2012ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந் தது. மகிழ்ச்சியான இவர்களது திருமண வாழ்வின் அடை யாளமாக ஆண் குழந்தை ஒன்று இவர்களுக்கு உள் ளது. இந்த ஜோடி களைப் போல் அன்பர்களும் தங் கள் திருமண வாழ்க் கையில் வெற்றிகர மாக வலம்வர இவர் கள் மனதார வாழ்த்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!