அன்பு புரிந்தது, மகிழ்ச்சி பிறந்தது

வில்சன் சைலஸ்

சீர்திருத்தப் பயிற்சி நிலையத்தில் சந்தித்த நண்பரின் வீட்டு நிகழ்வில் சந்தித்துக்கொண்ட இவர்கள் ஃபேஸ்புக் நண்பர்களாக மட்டுமே இருந்தனர். உயர்நிலை இரண்டுடன் கல்வியை முடித்துக்கொண்ட ஷாலோம் மதுபானக் கூடத்தில் 'டீஜே'வாக வேலை செய்தார். "மதுபானக் கூடங்களில் நடைபெறும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மட்டுமே ஷாலோமின் ஃபேஸ்புக்கில் இருந்தன," என்ற கியாரா, அவர் நல்லவர் இல்லை என எண்ணினார். ஷாலோமின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொண்டபோது அவரைப் பற்றி தாம் நினைத்தது சரிதான் என்றே கியாராவுக்குத் தோன்றியது. ஒரு வன்முறைச் சம்பவத்தால் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் தமது தவற்றை உணர்ந்தார் ஷாலோம். "இரண்டு மாதங்களுக்குச் சக்கர நாற்காலியே வாழ்க்கையானது. பூரணமாக குணமடைய எட்டு மாதங்களாயின. அந்தச் சம்பவம் என்னை மாற்றியது," என்ற ஷாலோமின் இடது கெண்டைக்கால் நரம்புகள் இன்று வரை செயலிழந்தே உள்ளன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலோமின் ஃபேஸ்புக்கைப் பார்த்த கியாராவுக்கு ஒரே வியப்பு. "பைபிள் வாசகங்களால் அவரது முகநூல் நிறைந் திருந்தது," என்றார் அவர்.

காலப்போக்கில் தமது எண்ணங்களை மாற்றிக்கொண்ட ஷாலோமிற்கு கியாரா தம்மிடம் மீண்டும் பேசிப் பழகியது அவ ருக்குள் உதவி மனப்பான்மையை உண் டாக்கியது. "கியாராவின் சிரமங்கள் எனக்குப் புரியத் தொடங்கின. ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன்," என்ற ஷாலோம், கியாராவிடம் தமது அன்பை வெளிப்படுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக ஷாலோமின் பண்புகளை கியாரா புரிந்துகொள்ளத் தொடங்கியபோது இருவருக்கும் இடையே நட்பு வலுப்பட்டது. இப்போது வெற்றி கரமான தொழில் முனைவராக இருக்கும் ஷாலோம், மூன்று ஆண்டு காதலைத் தொடர்ந்து இன்னும் இரு வாரங்களில் கியாராவைக் கரம்பிடிக்க இருக்கிறார்.

தோழி கியாராவுக்கும் நல்லாதரவாக இருந்து வரும் ஷாலோம். படம்: திமத்தி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!