இந்திய போர்க்கப்பல் மாலத்தீவை அடைந்தது

இந்தியாவின் ஆகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' மாலத் தீவு நோக்கி அனுப்பி வைக்கப் பட்டு உள்ளது. அதனுடன் 'ஐஎன்எஸ் மைசூர்' எனப்படும் எதிர்த்தாக்குதல் கப்பலும் 'ஐஎன் எஸ் தீபக்' எனப்படும் எண்ணெய்க் கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் வட்டா ரத்தில் சீனாவின் கடற்பரப்பு ஆதிக்கப் பயணங்களைக் குறி வைத்து விமானந்தாங்கிக் கப் பலை அந்த வட்டாரத்துக்கு இந்தியா அனுப்பி உள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

பெருங்கடல் வட்டாரத்தில் ஒட்டுமொத்த பாதுகாவல் அளிக்கும் தனது கடப்பாட்டை உறுதி செய்யும் நோக்குடன் நல்லெண்ண பயணம் மேற்கொண்டிருக்கும் அந்தக் கப்பல் இன்று மாலத்தீவு தலைநகர் மாலே சென்று சேர்கிறது. புதன்கிழமை வரையில் அந்த மூன்று கப்பல்களும் அங்கு மையம் கொண்டிருக்கும். கடல் நீரின் மேல் சுமார் 60 மீட்டர் உயரம் கொண்ட விக்ரமா தித்யா கப்பல் ஏர்பஸ் ஏ380 ரகத்தைச் சேர்ந்த நான்கு விமா னங்கள் இறங்கவும் வானில் பறந்து செல்லவும் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளது. 284 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் தனது முதல் வெளி நாட்டுத் துறைமுகப் பயணமாக கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் இலங்கைத் தலை நகர் கொழும்பு சென்று சேர்ந்தது.

இந்தியப் பெருங்கடல் வட்டா ரம் முழுதும் கால்பதிக்கும் நோக் கில் சீனா எடுத்துவரும் உத்தி பூர்வ செயல்களைத் தந்திரமாக முறியடிக்கும் நோக்கில் 'ப்ரா ஜெக்ட் மவ்சம்' என்னும் திட் டத்தை வகுத்து கடல்வழி ராணுவ நடவடிக்கையை நிலைநாட்ட இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரி விக்கின்றன. பாகிஸ்தானின் குவாடார் துறைமுகத்திலிருந்து இலங்கை யின் ஹம்பன்தோட்டா துறை முகம் வரையிலான இந்தியப் பெருங்கடல் வட்டார நாடு களுடன் தொடர்ந்து வலுவான இணைப்புகளை சீனா ஏற்படுத்தி வந்துள்ளது. எதிர்கால ஆதிக்கத்தை மனதில்கொண்டு அது இந்தத் தொடர்புகளை விரிவாக்கி வரு வதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2.33 பில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட 44,500 டன் எடைகொண்ட இந்தக் கப்பல், கடந்த மாதம் கொழும்பு சென்றபோது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன அந்தக் கப்பலுக்குச் சென்று அதன் போரிடும் தன்மையைப் பார்வையிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!