முதலீடுகளில் கவனம் செலுத்தவும்: தர்மன்

எண்ணெய் விலைச் சரிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங் களில் முதலீடு செய்வதில் விமானத் துறை கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் விமானக் காட்சி விமானத்துறை தலைமைத் துவ உச்சநிலைக் கூட்டத்தில் பேசிய அவர், சிங்கப்பூரின் வருங் காலப் பொருளியலில் விமானத் துறைக்கு இருக்கும் முக்கியத் துவம் குறித்தும் விளக்கினார்.

நாளை தொடங்கவிருக்கும் 'சிங்கப்பூர் விமானக் காட்சி 2016'ல் சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் போர் விமானங்களைக் காணலாம். நாளை முதல் 19ஆம் தேதி வரை வர்த்தக நிபுணர் களுக்காகவும் வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பொதுமக்களுக்காகவும் விமானக் காட்சி நடைபெறும். பொதுமக்களுக்கான காட்சி யின்போது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் F=15SG போர் விமானமும் AH=64D தாக்குதல் ஹெலிகாப்டரும் 11 விதமான சாக சங்களை நிகழ்த்தும். விமானங்கள் வானில் நிகழ்த் தும் சாகசங்களின் முன்னோட்டக் காட்சி நேற்று சாங்கி கண்காட்சி மையத்தில் நிகழ்த்தப்பட்டது. குறிப் பாக நேர்குத்து தந்திரம் எனப்படும் புதிய வகை சாகசமும் இடம்பெறும்.

கொரிய ஆகாயப் படையின் பிளாக் ஈகிள் விமான வித்தைக் குழு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புதிதாக மூன்றுவித சாகசங்களை இணைத்துள்ளது. அதேபோல, அமெரிக்க ஆகாயப் படை தனது போர் விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள் ஆகியவற்றின் வரிசையோடு சரக்கு விமானங்களையும் காட்சி யில் ஈடுபடுத்தும். அதன் போர் விமானங்களில் பிரசித்தி பெற்ற F=16C/D 'ஃபைட் டிங் ஃபால்கன்' போர் சுற்று எல்லைகளுக்குள் வளைந்து வளைந்து சென்று தாக்குவதைப் போன்ற சாகசத் திறன்களைக் காட்டும்.

தென் கொரிய ஆகாயப் படையின் பிளாக் ஈகிள் விமானக் குழுவின் சாகசங்களுள் ஒன்று. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!