சீனாவில் மருத்துவர், நோயாளியுடன் மருத்துவமனை இடிக்கப்பட்டது

பெய்ஜிங்: சீனாவில் மருத்துவர் களுடனும் நோயாளியுடனும் மருத்துவமனையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதனால் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பல உடல்கள் புதைக்கப்பட்டன என்று சீனா வின் அதிகாரபூர்வ ஊடகமான 'சிசிடிவி' தெரிவித்தது. வியாழக்கிழமை அன்று ஹெ னான் மாநிலத்தின் ஹுயூஜியில் உள்ள ஷெங்ஷோவ் பல்கலைக் கழக மருத்துவமனையின் ஒரு பகுதி இடித்துத் தள்ளப்பட்டதாக அது கூறியது.

"நான் எக்ஸ்=ரே இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது இடிக்கப்படும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. "எனக்கு அருகில் உட்கார்ந் திருந்த நோயாளி 'நில நடுக்கம்' என்று அலறி ஓடி விட்டார்," என்று," என்று டாக்டர் லியூ சுங்குவாங் கூறியதாக சிசிடிவி தெரிவித்தது.

சம்பவத்தின்போது மருத்துவ மனையில் சில மருத்துவர்களும் ஒரு நோயாளியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனையின் பிணவறை இடிந்து நாசமடைந்த தால் அங்கு பாதுகாக்கப்பட்ட ஆறு உடல்கள் இடிபாடுகளில் புதைந்துவிட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!