ரியாலுக்கு புத்துயிரூட்டிய ரொனால்டோ

மட்ரிட்: ஸ்பெயினின் லா லீகா காற்பந்துப் போட்டிகளில் அட் லெட்டிகோ பில்பாவ் குழுவை நேற்று முன்தினம் எதிர்கொண்ட ரியால் மட்ரிட் குழு சார்பாக இரு கோல்கள் போட்டு அதன் வெற்றியை உறுதி செய்தார் கிரிஸ்டியானோ ரொனால்டோ. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரியாலின் முதல் கோலை ரொனால்டோ போட்டார். இதற்குப் பதிலடியாக, ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அட்லெட்டிகோ பில்பாவின் ஜாவி எராசோ ஆட்டத்தைச் சமநிலைப்படுத் தினார். ஆனால் முதல் பாதி ஆட்டம் முடியுமுன்னரே ரியாலின் ஜேம்ஸ் ரோட்டிரிகெசும் டோனி குருஸும் போட்ட கோல்கள் ரியாலுக்கு மீண்டும் முன்னிலை பெற்றுத் தந்தன. இந்த ஆட்டத்தில் ரியாலின் ரஃபையல் வரானேவுக்கு தப்பாட் டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு அவர் ஆட்ட மைதானத்திலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

எனினும், ஆட்டத்தின் 87ஆம் நிமிடத்தில் ரொனால்டோ மீண் டும் ஒரு கோல் போட்டு வெற்றியை உறுதி செய்தார். பின்னர் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அட்லெட்டிகோ பில்பாவ் குழு மேலும் ஒரு கோல் போட்டாலும் இறுதியில் 4-2 என்ற ரியாலின் வெற்றியை அது பாதிக்கவில்லை. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கேரி நெவில் நிர்வகிக்கும் வெலன்சியா குழு லா லீகா ஆட்டங்களில் தனது முதல் வெற் றியை 2-1 என எஸ்பான்யோல் குழுவுக்கு எதிராகப் பதிவு செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!