எஸ் லீக்: டிபிஎம்எம் புருணை குழுவை வென்ற அல்பிரக்ஸ் நிகாட்டா குழு

எஸ் லீக் காற்பந்துப் பருவத்தின் முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரு வெளிநாட்டுக் குழுக்களான அல்பிரக்ஸ் நிகாட்டா குழுவும் டிபிஎம்எம் புருணை குழுவும் மோதின. இதில் சென்ற காற்பந்துப் பருவத்தின் வெற்றியாளர் களான டிபிஎம்எம் புருணை குழு அல்பிரக்ஸ் நிகாட்டா குழுவிடம் 2=3 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது. ஆட்டம் தொடங்கிய அரைமணி நேரத்திலேயே 3=0 என்ற கோல் எண்ணிக்கையில் அல்பிரக்ஸ் குழு முன்னணிக்குச் சென்றது.

பின்னர் ஆட்டத்தின் 66வது நிமிடத்திலும் கடைசி நிமிடத் திலும் இரண்டு கோல்களை புருணை குழு போட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தக் காற்பந்துப் பருவத்தில் எஸ் லீக் கிண்ணத்தை தங்களால் வெல்ல முடியுமா என்று அல்பிரக்ஸ் நிகாட்டா குழுவின் பயிற்றுவிப்பாளரான நவோக்கி நருவோவிடம் கேட்டதற்கு, "என்னால் இப்பொழுது உறுதியாகக் கூற முடியாது, ஏனெனில் இதுதான் முதல் ஆட்டம். ஆனால் இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் விளையாடியதுபோல் நாங்கள் தொடர்ந்து விளையாடினால், முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். முதல் பாதி ஆட்டத்தில் சிறந்த காற்பந் தாட்டத்தை வெளிப்படுத்தினோம்," என்று அவர் கூறினார். ஜப்பானியக் குழுவான அல்பிரக்ஸ் நிகாட்டா எப் பொழுதுமே கட்டுக்கோப்பாக விளையாடக் கூடியவர்கள் எனி னும் இந்த முறை நருவோவின் பயிற்சியால் அந்தக் குழுவினர் கோல் போடுவதில் கூடுதல் முனைப்புக் காட்டுவதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!