ஜோகூரிலிருந்து செகாமட் நிலையம் வரை ரயிலை ஓட்டிய ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான் இப்­ரா­கிம் அல­மர்­ஹம் சுல்தான் இஸ்­கந்தர் நேற்று ஜோகூர் சென்ட்­ரல் நிலை­யத்­தி­லி­ருந்து செகாமட் நிலை­யத்­துக்கு ரயிலை ஓட்டிச் சென்றார். ஒன்­ப­தா­வது முறையாக ரயிலின் ஓட்­டு­நர் இருக்கையை அலங்க­ரித்த அவர் நேற்று 180 கிமீ. தூரத்­துக்கு ரயிலை ஓட்டிச் சென்றார். இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அவர் ரயிலை ஓட்­டி­ய­தாக பெர்னாமா தெரி­வித்­தது. ரயில் வண்டியை இயக்­கத் தேவையான 26வது பிரி­வுக்­கான ஓட்­டு­நர் உரி­மத்தை 2010ஆம் ஆண்டு சுல்தான் பெற்­ற­தா­க­வும் கூறப்­பட்­டது.

வாடகைக்கு எடுக்­கப்­பட்ட ஆறு பெட்­டி­களைக் கொண்ட ரயில் வண்டியை நேற்று அவர் ஓட்டினார். வழியில் எட்டு நிலை­யங்களைக் கடந்து ஐந்து மணி நேரப் பய­ணத்­திற்­குப் பிறகு அந்தப் பயணம் முடி­வு­றும் என பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்­பிட்டிருந்தது. தற்போது செயல்­பாட்­டில் இல்லாத தஞ்சோங் பகார் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி கிளம்­பிய கடைசி ரயிலை ஜோகூர் சுல்தான் ஓட்டிச் சென்றது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!