திமுக ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிச்சயம் நிறைவேற் றப்படும்: ஸ்டாலின்

சென்னை: குட்டு மேல் குட்டு வாங்கியும் தமிழக அரசு திருந்திய பாடில்லை எனத் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடந்துள்ளதா என்பதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாகக் கூறியுள்ளார். "செயல்படாத ஒரு அரசாங்கத்தை நடத்திய பின்னும், அதில் ஏதோ பல சாதனைகளைப் புரிந்துவிட்டது போல அதிமுக வினர் பேசுகிறார்கள்.

ஊர் உலகம் முழுக்க ஏராளமான பதாகைகள், சுவரொட்டிகளை எப்படித்தான் வைக்கின்றனரோ, தெரியவில்லை. "பேரவையிலும் தான்தோன் றித்தனமாக நடந்துகொள்கிறார் கள். அதனால்தான், தேமுதிக உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளித்தனர். "தேமுதிகவினர் இடைநீக்க நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் அத்தடையை விலக்கிக் கொள்ளுமாறும் சபாநாயகர் உள் ளிட்ட அனைவரிடமும் வலியுறுத்தி னேன். ஆனால், அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை," என்றார் ஸ்டாலின். ஆளும் தரப்பினர் தங்களது நட வடிக்கையில் உறுதியாக இருந் ததாகக் குறிப்பிட்ட அவர்,

இதன் காரணமாகவே உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். "இப்படித்தான், பல விஷயங்க ளிலும் அலட்சியமும் ஆணவமும் மேலோங்கி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குட்டு மேல் குட்டு வாங்கி வருகிறது. ஆனாலும், அதையும் அவர்கள் பொருட்படுத்தியதா கவோ, திருந்தியதாகவோ தெரிய வில்லை," என ஸ்டாலின் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே முகநூல் பதிவு ஒன்றில், திமுக ஆட்சி அடுத்து அமையும் பட்சத்தில் கோவை மக்களின் முக்கியத் தேவைகளில் ஒன்றான, அத்திக்கடவு - அவி னாசி திட்டம் நிச்சயம் நிறைவேற் றப்படும் என்று உறுதியளித் துள்ளார். "இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் அதிமுக அரசு துளியும் அக்கறை காட்டவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!