ஆம் ஆத்மி ஆட்சி; ஓராண்டு நிறைவு

புதுடெல்லி: முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும், டெல்லியில் ஓராண்டு ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கடந்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி. சரியாக கடந்த ஆண்டு அன்பர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில் ஆட்சி அமைத்தது அக் கட்சி. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு மாநில பிரச்சினைகள், அரசியல் எதிர்ப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் முதல்வர் அலுவலகத்தில் ஓராண்டை நிறைவு செய்துள்ளார் அவர். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மீது காதல் மலர்ந்ததாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். "ஆழமான இந்தப் பந்தம் என்றும் நிலைத்திருக்கும்," என்று கெஜ்ரிவால் தனது பதி வில் கவிதை நயத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஆம் ஆத்மியின் ஆட்சி குறித்து அம்மாநில மக்களிடம் அண்மை யில் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ற பலர் கெஜ்ரிவால் ஆட்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியினருடன் உற்சாகத் தருணம் ஒன்றில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!