பாதுகாப்பு ஆபத்துகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலத்தில் அமைதி நிலையை கிள்ளுக்கீரையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் எச்சரித்துள்ளார். 52வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற மியூனிக் சென்றிருக்கும் டாக்டர் இங் இதனை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். "கிரைமியா, உக்ரேன் நாடுகளி லுள்ள நெருக்கடிநிலை, பிரான்சில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள், ஐரோப்பிய நாடு களில் வந்திறங்கும் ஏராளமான அகதிகள் போன்ற பிரச்சினைகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
"இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, சிங்கப்பூர் தனது அமைதியை சர்வசாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ளவோ, பாதுகாப்பை குறைத்துவிடவோ கூடாது என்பதே மீண்டும் உறுதி யாகிறது. ஐரோப்பாவைப் போலன்றி, நமது பாதுகாப்புக்கு நம்மை மட்டுமே நாம் நம்பியுள் ளோம். இதை மறந்துவிட்டால் நாம் சிங்கப்பூரை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்ள வேண் டும்," என்று அமைச்சர் கூறினார். முன்பு பனிப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து "அமைதி ஈவை" அனுபவிப்பதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. ஆனால், தற்போது நிலைமை அப்படியில்லை. முன்பு புதிய, அமைதி யான நிலைமைக்கு ஏற்ப கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடு களின் ராணுவங்களும் தங்களது வலுவைக் குறைப்பதில் கவனம் செலுத்தின. வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பைக் குறிப்பிட்டு, நேட்டோ தேவையா என்ற கேள்வி கூடஎழுந்தது என்றார் அமைச்சர்.