சான் பிரான்சிஸ்கோ சென்ற பிரதமர் லீ சியன் லூங் சனிக்கிழமை அன்று அங்குள்ள சிங்கப்பூர் தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதுடன் சீனப் புத்தாண்டு ஒன்றுகூடலிலும் பங்கேற்றார். அத்துடன் விவசாயிகள் சந்தையையும் சுற்றிப் பார்த்தார். அமெரிக்கப் பயணம் குறித்து தமது ஃபேஸ்புக்கில் அன்றாடம் பதிவேற்றி வரும் பிரதமர், சிங் கப்பூர் தொழில்நுட்ப நிபுணர்களுடன் இது தமது முதல் கலந்துரையாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.
"சிலர் நிலைபெற்ற நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சிலர் சொந்த நிறுவனங்களை வைத்துள்ளனர். சிங்கப்பூரில் நடப்பதை அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களுடன் நமது அறிவார்ந்ததேச திட்டத்திற்கான திட்டங்களையும் இலக்குகளையும் பகிர்ந்துகொண்டேன்," என்ற திரு லீ கூறினார். சீனப் புத்தாண்டு ஒன்றுகூடலில் மாணவர்கள், வேலை செய்யும் நிபுணர்கள், குடும்பங்கள் என கிட்டத்தட்ட 250 பேரைச் சந்தித்தார்.