காதல் விளக்கங்கள்

அன்பர் (காதலர்) தினம் நேற்று உலகெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரபல நடிகைகள் காதல் குறித்து என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வோமா? "காதல் என்பது நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பாசம், சின்ன மரியாதை, மதிப்பு இதெல்லாம் சேர்ந்தது. உணவகம் சென்று சாப்பிடுவதும் பிடித்தமானவர்களை வெளியில் அழைத்துப்போவதும் ரோஜாக்கள் வாங்கித் தருவதும் காதலின் முதல்படிதான். ஆனால் உண்மையான காதல் என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூடவே இருக்கவேண்டும்," என்கிறார் பாவனா.

"எல்லாருக்கும் காதல் அவசியமான ஒன்று. அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் எல்லோரிடமும் காதல் இருக்கலாம். "முதலில் நம்மை நாம் நேசிக்கணும். நாம் பார்க்கும் வேலையை நேசிக்க வேண்டும். நான் என் சினிமா வேலையை ரொம்பவே ரசிக்கிறேன். அதனால்தான் வெற்றியைத் தரமுடிகிறது. முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்," என்கிறார் ஸ்ரீ திவ்யா. "காதல் ஒரு இனிமையான வலி," என்பது பிந்து மாதவியின் கருத்து. அது ஒவ்வொருவரின் உணர்ச்சிகளைச் சார்ந்தது என்றும் கூறுகிறார். "ஒருவரை இழக்கும்போதும் ஒருவரைப் பிரியும் போதும் காதல் வலியைக் கண்டிப்பாக வார்த்தைக்குள் அடக்கி விடமுடியாது. அன்பு செலுத்து வோம், அன்பை பெறுவோம்," என்கிறார் பிந்து மாதவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!