தேர்தலில் போட்டியிட 42 பேருக்குத் தடை

தேர்தல் செலவு கணக்கைத் தாக் கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டி யிடத் தடை விதித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அந்த அதிகாரி நேற்று 'வாட்ஸ்அப்' செயலி மூலம் ஒரு தகவலை வெளியிட்டார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய் யாத 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் களாகக் கருதி அவர்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கப் படுவதாக அந்தத் தகவலில் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்கள் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தடை செய்யப் பட்ட வேட்பாளர்கள் யார், அவர் கள் எந்தெந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்களை ராஜேஷ் லகானி தெரிவிக்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!