இந்தியாவில் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 50% அதிகரிப்பு

இந்தியாவுக்குப் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 விழுக்காடு அதிகரித்து உள்ளது. அந்த எண்ணிக்கையில் பிரெஞ்சு மாணவர்களின் எண் ணிக்கை 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிகரித்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சின் புள்ளிவிவரம் தெரி விக்கிறது. ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு படிக்கச் சென்ற வர்களின் எண்ணிக்கை முறையே 124% என்றும் 123% என்றும் அதிகரித்துள்ளது. மொத்தமாக, கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 66,885 மாணவர்கள் இந்தியாவுக்குச் சென்றனர். அதற்கு முந்திய ஆண்டான 2014ல் அங்கு சென்ற மாண வர்களின் எண்ணிக்கை 44,620. பங்ளாதே‌ஷிலிருந்தும் ஆப்கானிஸ் தானிலிருந்தும் வழக்கமாக செல் வோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்வு கண் டது. இந்த இரு நாடுகளிலிருந்து மட்டும் 11,000 மாணவர்கள் இந்தியா சென்றனர்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் படிக்கச் சென்றவர்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு 123% உயர்ந்தது. அதேபோல, தென் கொரிய மாணவர் எண்ணிக்கை 43 விழுக்காடும் இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவர்களின் எண் ணிக்கை 1.8 விழுக்காடும் உயர்ந் தது. அமெரிக்காவிலிருந்து சென்ற மாணவர் எண்ணிக்கை மட்டும் சரிவைச் சந்தித்தது. 2014ஆம் ஆண்டில் சென் றோரைக் காட்டிலும் 12 விழுக்காடு குறைவான அமெரிக்க மாணவர் கள் கல்வி கற்பதற்காக இந்தியா சென்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!