தூதர் எஸ். சந்திரதாஸின் திருகோணமலை பயணம்

இலங்கைக்கான சிங்கப்பூரின் தூதர் திரு எஸ். சந்திரதாஸ் நேற்று முன்தினம் பிரதிநிதித்துவப் பயணம் மேற்கொண்டு இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள திருகோணமலைக்குச் சென்றார். அங்கு கிழக்கு மாகாணங்க ளுக்கான முதல் அமைச்சர் திரு அகமது நஸீரையும் திருகோண மலைக்கான நாடாளுமன்ற உறுப்பி னர் திரு சம்பந்தனையும் திரு சந்திரதாஸ் சந்தித்துப் பேச்சு நடத்தினார். திரு சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. திரு அகமது நஸீரும் திரு சம் பந்தனும் திருகோணமலையின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி சிங்கப்பூர் தூதருக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் திருகோணமலையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்ததாக திரு சந்திரதாஸ் கூறினார். திருகோணமலையின் எல்லைகளாக அனுராதபுரம், பொலநறுவ, மட்டக்களப்பு, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்கள் அமைந் துள்ளன. இது பண்டைய காலம் முதலே பிரபலமான இயற்கைத் துறைமுகமாக இருந்து வந்துள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணங்களுக்கான முதல் அமைச்சர் திரு அகமது நஸீர் (இடது) இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ். சந்திரதாஸிடம் கிழக்கு மாகாணங்களுக்கான முதலீட்டு விளம்பரப் பிரசுரங்கள் தொகுப்பை வழங்குகிறார். படம்: முதல் அமைச்சர் அலுவலகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!