காயமடைந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்தவர்களுக்குப் பாராட்டு

பணியில் இல்லாதபோதிலும் யீ‌ஷூன் எம்ஆர்டி நிலையத்தில் வழுக்கி விழுந்த மூதாட்டி ஒருவரின் உதவிக்கு விரைந்த தனது துணை மருத்துவ அதிகாரிகளை (படம்) சிங்கப்பூர் ஆயுதப் படை பாராட்டியுள்ளது. வழுக்கி விழுந்த மூதாட்டியின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. டினி அஃபிக், ஸுல்ஃபால்டி ஆகியோர் மூதாட்டியின் நெற்றியிலிருந்து ரத்தம் கசிவதை நிறுத்தி கட்டுப்போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த இருவருடன் சேர்ந்து சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான ஹோங் ருயி, ஃபாமி, கிஷன் ஆகியோரும் சிங்கப்பூர் முதலாவது காவற்படை பட்டாளத்தைச் சேர்ந்த ஜெரால்ட்டும் மூதாட்டிக்கு உதவி செய்ததாக முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கும் தேசிய சேவையாளர்களுக்குமான 'தி ரிசர்விஸ்ட்' ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!