தனியார் வீடுகள் விற்பனை சரிவு

தனியார் வீடுகள் விற்பனை கடந்த மாதம் குறைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தனியார் வீடுகள் விற்பனை 16 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. எக்சிகியூடிஃப் கொண்டோமினிய வீடுகளைச் சேர்க்காமல் கடந்த மாதத்தில் 322 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 384 தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இந்தத் தகவலை நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்டது. எக்சிகியூடிஃப் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து கடந்த மாதத்தில் 478 வீடுகள் விற்கப்பட்டன. எக்சிகியூடிஃப் கொண்டோமினிய வீடுகளையும் சேர்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 508 வீடுகள் விற்கப்பட்டன. புதிய தனியார் வீடுகளின் விற்பனையை சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் தள்ளிவைத்துள்ளதால் தனியார் வீடுகளின் விற்பனை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!