சசிகலா: சலசலப்பை கண்டு அஞ்சமாட்டேன்

அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கே என்று கூறி, அதற்குச் சான்றாக அவர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடி தங்களுடன் ஆளுநர் வித்யா சாகர் ராவைச் சந்தித்த சசிகலா, தம்மை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத் தார். ஆனாலும் ஆளுநர் இதுவரை அவருக்கு அழைப்பு விடுக்க வில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் தீர்ப்பு வெளி யாகவுள்ள நிலையில் அதுவரை பொறுத்திருக்கலாம் என்று அவர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சசிகலா, “ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும். விரை வில் அழைப்பு வராவிடில் எங்களது நடவடிக்கை வேறுவிதமாக இருக்கும்,” என்று எச்சரித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நாட்டு மாடுகள் இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. - கோப்புப்படம்

24 Jul 2019

நாட்டுப் பசு இனம் அழிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்து