712 மில். டாலர் போதைப்பொருள் பறிமுதல்

சிட்னி: அட்டைப்­பெட்­டி­களில் வைக்கப்பட்ட பெண்­களின் உள் ளாடைகளுக்­குள் மறத்து வைத்து ஹாங்காங்­கி­லி­ருந்து கடத்­தப்­பட்ட மிகப் பெரிய அளவிலான 'ஐஸ்' எனப்படும் 'மெதம்­ஃ­பெ­டமைன்' போதைப் பொருளை ஆஸ்­தி­ரே­லிய போலிசார் பறி ­மு­தல் செய்­துள்ளனர். 720 லிட்டர் கொள்­ள­ளவு கொண்ட அந்த திரவ போதைப்பொருள் 712 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்­கும் மேல் மதிப்­பு டையது. அந்த திரவத்தைக் கொண்டு 500 கிலோ­கி­ராம் திட 'மெதம்­ஃ­பெ­டமைன்' உரு­வாக்­கப் பட்­டி­ருக்­ க­லாம் என்று ஆஸ்­தி­ரே­லிய போலிஸ் உயர் அதிகாரி கிறிஸ் ‌ஷீஹன். அந்த போதைப் பொருள் உற்­பத்தி, கடத்­தல் தொடர்­பில் நால்­வரைக் கைது செய்­துள்­ள­னர். அனைத்­து­லக 'மெதம்ஃபெ­ட மைன்' கடத்­தலைக் கட்­டுப் ­படுத்த சீன அதி­கா­ரி­களு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய போலிஸ் தெரி­வித்­தது.

"பெரும் லாப­ம் ஈட்­டு­வதற்கு போதைப் பொருள் கும்பல்­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பிரபலமாக இருந்து வரும் 'ஐஸ்' சந்தை யைக் குறிவைத்­துள்­ளன," என்றார் ஆஸ்­தி­ரே­லிய சட்ட அமைச்­சர் மைக்கெல் கீனன்.

அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளுக்குள் மறத்து வைத்து கடத்தப்பட்ட 'ஐஸ்' எனப்படும் 'மெதம்ஃபெடமைன்' போதைப்பொருளை ஆஸ்திரேலிய போலிசார் பறிமுதல் செய்தனர். 712 மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள அது ஆஸ்­தி­ரே­லிய வர­லாற்­றில் இதுவரை செய்­யப்­பட்ட ஆகப் பெரிய போதைப் பொருள் பறிமுத­லா­கும். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!