‘இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு’

விசாகப்பட்டினம்: வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கும் அணிகளில் இந்திய அணியும் ஒன்று என அதன் தலைவர் டோனி கூறியுள்ளார். இலங்கை அணிக்கெதிராக நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. முதலில் பந்தடித்த இலங்கை அணியைத் தொடக்கத்திலேயே முடக்கினார் அஸ்வின். முதல் ஓவரிலேயே அவர் இரண்டு விக் கெட்டுகளைச் சாய்க்க, இலங்கை அணியால் பின்னர் மீண்டெழவே முடியவில்லை.

இறுதியில், அந்த அணி 18 ஓவர்களில் 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து இலக்கை எட்டியது. போட்டிக்குப் பின் பேசிய டோனி, "டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி எப்போதுமே முன்னிலையில்தான் இருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கும்போது சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருக்கும். இது எங்களுக்குக் கூடுதல் சாதகம்," என்றார் அவர். மேலும், ஐபிஎல் அனுபவமும் தங்களுக்குப் பெரிதும் கைகொடுக் கும் என்றும் அவர் நம்புகிறார். டி20 போட்டிகளில் அஸ்வின் தொடக்கத்திலேயே பந்துவீசி விடு வதால் கடைசி ஓவர்களை வீச சரியான ஆளில்லாமல் தவித்து வந்தது இந்தியா. இந்நிலையில், புதுமுக வீரர் ஜஸ்பிரீத் பும்ரா அந்த இடத்தில் சிறப்பாகச் செயல் படுவது பக்கபலமாக இருக்கும் என்றும் டோனி குறிப்பிட்டார். இதற்கிடையே, இலங்கை அணிக்கெதிரான தொடரை வென் றதால் மீண்டும் உலகத் தரவரிசை யில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது.

நான்கு ஓவர்களை வீசி எட்டு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி டி20 போட்டிகளில் புதிய இந்திய சாதனை படைத்த அஸ்வின், ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் தட்டிச் சென்றார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!