போராடி தோல்வியைத் தவிர்த்த லிவர்பூல்

லண்டன்: பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூலின் தற்காப்பு ஆட்டக்காரர் பிராட் ஸ்மித் புகுத்திய கோல் அக்குழுவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றி உள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எக்ஸ்சிடர் குழுவுடன் மோதியது லிவர்பூல். நான்காவது நிலை லீக்கில் இருக்கும் எக்ஸ்சிடரை லிவர்பூல் மிக எளிதில் உதறித் தள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல முன்னணி ஆட்டக்காரர்கள் காயம் காரணமாகக் களமிறங்காததால் மாற்று ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்டு ஆடியது லிவர்பூல்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு வெற்றி பெறும் திட்டத்துடன் மிகுந்த முனைப்புடன் தாக்குதல்களை நடத்தினர் எக்ஸ்சிடர் அணியின் ஆட்டக்காரர்கள். அவர்களது அதிரடி முயற்சிக்கு ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களிலேயே பலன் கிட்டியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!