லிட்டில் இந்தியாவுக்குப் பொலிவூட்டும் சுவர்ச் சித்திரங்கள்

லாசால் கலைக் கல்லூரியின் ஹானர்ஸ் கலை நிர்வாக மாணவர் களுடன் இணைந்த உள்ளூர் ஓவியர்களின் கைவண்ணத்தில் லிட்டில் இந்தியாவின் பெலிலி யோஸ் சாலையின் கடைச் சுவர் கள் தற்போது புதுப் பொலிவுடன் மிளிர்கின்றன. லிட்டில் இந்தியாவிற்கு வண்ணம் சேர்த்துள்ள பாரம்பரிய வேலைகளை அங்குள்ள சுவர் களில் ஓவியங்களாகத் தீட்டி யிருப்பதன் மூலம் 'ஆர்ட் வீக் லிட்டில் இந்தியா' எனும் கலை விழா நிகழ்வு அங்கு வருபவர் களின் கண் முன் பழைய நினைவு களை நிழலாடவைக்கும். கிளி ஜோசியர், பால் விற்கும் வங்காள வியாபாரி, 'ஐஸ்' பந்து கடைக்காரர்கள், மலர்வளையம் விற்பவர், சலவைத் தொழிலாளி ஆகிய தொழில்கள் சுவரோவியங் களாக வலம் வருகின்றன.

லிட்டில் இந்தியா கடைக் காரர்கள், மரபுடைமைச் சங்கம், இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவற்றின் ஆதரவுடன் லாசால் கலைக் கல்லூரியும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் கலை வாரத்தின் தொடர்பில் நடத்துகின்றன. சுவர்ச் சித்திரங்களை வரைவ துடன் லிட்டில் இந்தியாவில் ஆங்காங்கே தெரிவு செய்யப்பட்ட மூலைகளில் ஓவியங்களையும் வைப்பதற்கு அப்பாற்பட்டு இந்திய சமூகத்தைச் சார்ந்த திரைப் படங்களையும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம். இத்துடன், லாசால் கல்லூரியின் இன்னாள், முன்னாள் மாணவர்களும் உள்ளூர் கலைக் குழுக்களும் மேடையேற்றும் இசை, கலாசார நிகழ்ச்சிகளையும் ரசிக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!