போலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்றவருக்குச் சிறை

வாகன விபத்தில் ஈடுபட்டதை அடுத்து போலிஸ் அதிகாரி யிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பறிக்க முயன்ற முன்னாள் சொத்து முகவரான 38 வயது ஹான் ஜிங்குக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனையும் பிரம்படிக்குப் பதிலாக 12 வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று தாம்சன் வட்டாரத்திலுள்ள சூ சோவ் டிரைவ், சூ சோவ் கார்டன் ரோடு சந்திப்பில் அந்த மாது இந்தக் குற்றத்தைப் புரிந்தார். விபத்து நிகழ்ந்த சூ சோவ் கார்டன் ரோட்டிற்கு இரு போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் வந்தபோது ஓட்டுநர் ஹான் அங்கு காணவில்லை. அதிகாரிகள் பிறகு அவரை பேருந்து நிறுத்தத்தில் கண்டபோது விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரச் சொன்ன போது முதலில் ஒத்துழைத்த ஹான், பின்னர் மறுபடியும் அங்கிருந்து சென்றுவிட்டார். அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தி அவரைத் திரும்பி வரச் சொன்னபோது திடீரென ஹான் அதிகாரியிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பறிக்க முயன்றார். இதனையடுத்து ஹான் கைது செய்யப்பட்டார். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இரண்டு மில்லியன் இருநூற்றாண்டு $20 நோட்டுகளை நாணய ஆணையம் வெளியிட்டு உள்ளது. படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம்

17 Sep 2019

இருநூற்றாண்டு $20 நோட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம்: எஸ்டி

17 Sep 2019

ஆகஸ்டில் தனியார் வீட்டு விற்பனை