தேசிய சின்னமாக சாங்கி சிறையின் நுழைவாயில், சுவர், கண்காணிப்புக்கோபுரம்

சாங்கி சிறையின் நுழைவாயில், சுவர், கண்காணிப்புக் கோபுரம் ஆகியவை தேசிய நினைவுச் சின்னமாகின்றன. சிங்கப்பூரின் போர்க்கால அனுபவங்களை நினைவுகூரும் வகையில் இவை தேசிய நினைவுச் சின்னமாக்கப்படுவதாக தேசிய மரபுடைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இரண்டாம் உலகப் போரின்போது, 1942 பிப்ரவரி 15ஆம் தேதி சிங்கப்பூர் ஜப் பானிடம் சரணடைந்தது. அது "சிங்கப்பூர் வரலாற்றின் இருண்ட காலத்தின் நினைவு" என மரபுடைமைக் கழகம் குறிப் பிட்டது. அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலையாக சாங்கி சிறையை பொதுப்பணித் துறை வடி வமைத்தது. 1936ல் கட்டி முடிக்கப்பட்ட சிறை, 1937 ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் தென்கிழக்காசியாவின் பிரதான போர்க்காலக் கைதிகளின் முகாம் களாக சாங்கி சிறையும் அதைச் சுற்றியிருந்த இல்லங்களும் விளங்கின. "1942க்கும் 1945க்கும் இடைப்பட்ட கொந்தளிப்பான போர்க்காலத்தின் போது சிங்கப் பூரைத் தற்காத்தவர்களின் துயரத்தின் சின்னமாக இன்று சாங்கி சிறை விளங்குகிறது," என்றார் மரபுடைமைக் கழகத்தின் இயக்குநர் ஜீன் வீ.

சாங்கி சிறையின் நுழைவாயில், சுவர். படம்: சாங்கி சிறை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!