அவசரம் என்றாலும் அவசியமான ஒன்று

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பலரும் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காலை உணவின் அவசியத்தை வலியுறுத் துவதாக அமைந்துள்ளன புதிய ஆய்வு முடிவுகள். அன்றாடம் காலையில் தவ றாமல் உணவு உட்கொள்வது உடல் எடையை, குறிப்பாக குண் டானவர்கள் உடல் மெலிய உதவு கிறது. அத்துடன் நாள் முழுதும் அவர்களைத் துடிப்புடன் இருக்கச் செய்யவும் மற்ற வேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்ளவும் காலை உணவு பெரும் துணை செய்வதாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர். உடல் உழைப்பு தேவைப்படாத வேலை செய்பவர்களைச் சுறுசுறுப் பாக இருக்கச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்கள் ஆரோக்கிய மான வாழ்க்கைமுறையைக் கடைப் பிடிக்க காலை உணவு அவசியம். "காலை உணவு அவசியமா அல்லது தவிர்க்கலாமா என்பது குறித்து இதுநாள் வரை பலரும் பல கருத்துகளைச் சொல்லி வந்தாலும் அதனால் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வலுவான, அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை," என்றார் பிரிட்டன் பேத் பல்கலைக்கழகத் தின் தலைமை ஆய்வாளர் ஜேம்ஸ் பெட்ஸ்.

இந்நிலையில், திரு ஜேம்ஸ் தலைமையிலான ஆய்வுக்குழு வினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ஒருவருக்குக் காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. காலை உணவு, உடல் எடை, உடல் நலன் ஆகிய மூன்றுக்கும் இடையிலான சாத்தியமான தொடர்புகள் குறித்து ஆராய அந்த ஆய்வுக் குழுவினர் விரும் பினர். இதற்காக, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட குண்டானவர்கள் சிலரை இரு பிரிவுகளாகப் பிரித்த அவர்கள், ஒரு பிரிவினரைக் காலை உணவைத் தவிர்க்கவும் மற்றொரு பிரிவினரை தவறாது காலை உணவை உட்கொள்ளவும் செய்தனர்.

இந்த ஆய்வு ஆறு வாரங்களுக்கு நீடித்தது. இரண்டாவது பிரிவினர் காலை 11 மணிக்குள் குறைந்தபட்சம் 700 கேலரி ஆற்றல் தரவல்ல உணவை உட்கொள்ள அறிவுறுத் தப்பட்டனர். முதல் பிரிவினர் நண்பகல் வரை வெறும் தண்ணீர் மட்டுமே எடுத்துக் கொண்டனர். "காலை உணவைத் தவிர்ப் பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதற்கு உறுதி யான அறிவியல் சான்றுகள் இல்லை. ஆயினும், துடிப்புடன் இருந்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று திரு ஜேம்ஸ் குறிப்பிட்டார். அதே நேரத்தில், காலை உணவு எல்லாரிடத்திலும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத் தும் என்றும் எல்லா காலை உணவுகளும் ஒன்றுதான் என்றும் கருதக்கூடாது. "சர்க்கரை அளவு அதிகம் கொண்ட காலை உணவும் புரதச்சத்து நிரம்பிய காலை உணவும் வெவ்வேறான விளைவு களைத் தரும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்," என்று ஆய்வாளர் என்ஹட் சௌத்ரி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!