முன்னிலையைப் பறிகொடுத்து சமநிலை கண்ட தெம்பனிஸ்

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்கள் முன்னிலை யில் இருந்தபோதும் ஆட்டம் முடியும் கட்டத்தில் தோல்வி யிலிருந்து தப்பிக்கப் போராட வேண்டிய நிலை தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுக்கு இப்பருவத் துக்கான அதன் முதல் எஸ்=லீக் ஆட்டத்தில் ஏற்பட்டது. தலைமைப் பயிற்றுவிப்பாளர் வி. சுந்தரமூர்த்தி வகுத்த வியூகங்களுடன் கேலாங் இன்டர்நேஷனல் குழுவுடன் மோத தெம்பனிஸ் குழு களமிறங்கியது. இந்த ஆட்டம் ஜூரோங் வெஸ்ட் விளையாட் டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஆட்டத்தை நேரில் காண ஏறத்தாழ 2,900 ரசிகர்கள் விளையாட்டரங்கத்தில் திரண் டனர். அவர்களில் தேசிய காற் பந்துக் குழுவின் பயிற்று விப்பாளர் பெர்ன் ஸ்டாங்க, சிங்கப்பூரின் முன்னாள் காற் பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமது, அவரது மகன் இர்ஃபான் அகமது ஆகியோர் அடங்குவர். ஆட்டம் தொடங்கியதி லிருந்து தாக்குதலில் ஈடுபட்ட தெம்பனிஸ் குழு 13வது நிமிடத்தில் ஜோர்டன் வெப் மூலம் அதன் முதல் கோலைப் போட்டது. அதனைத் தொடர்ந்து 34வது நிமிடத்தில் பில்லி மேமட் தெம்பனிசின் இரண்டாவது கோலை புகுத்தினார். வெல்வது உறுதி என்று நினைத்த தெம்பனிசுக்கு அடுத்த நிமிடத்திலேயே கேலாங் பதிலடி கொடுத்தது. ஏமி ரெச்சா அனுப்பிய பந்து வலையைத் தொட்டதும் கேலாங் உயிர்ப்பித்துக்கொண்டது.

கேலாங் ஆட்டக்காரர்களைக் கடந்து செல்லும் தெம்பனிசின் ஜெர்மேன் பென்னண்ட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!