டோனி: டி20 உலகக் கிண்ணத்தில் ரகானேவுக்கு வாய்ப்பு சந்தேகமே

புதுடெல்லி: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்தடிப்பாளர்களில் ஒருவரான ரகானே களமிறங்குவது சந்தேகமே என்று இந்திய அணித் தலைவர் டோனி சூசகமாகத் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் ரகானே விளையாடவில்லை. அண்மையில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் விராத் கோஹ்லிக்குப் பதிலாக விளையாடினார். விராத் கோஹ்லிக்கு இலங்கை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டதால் அந்த வரிசையில் ரகானே ஆடினார். ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகளில் கோஹ்லி மூன்றாவது பந்தடிப்பாளராக விளையாடுகிறார்.

இதனால் ரகானேயின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது. நான்காவது பந்தடிப்பாளராக ரெய்னாவும் ஐந்தாவது பந்தடிப்பாளராக யுவராஜ் சிங்கும் ஆறாவது வரிசையில் டோனியும் விளையாடுபவர்கள். ஏழாவது வீரர் வரிசையில் புதுமுக 'ஆல்ரவுண்டர்' ஹிர்த்திக் பாண்டியாவும் அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் உள்ளனர். தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் நல்ல நிலையில் உள்ளனர்.

knf;epju டோனி:

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!