பாகிஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக இந்து திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம்

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாநிலம், நாட்டிலேயே முதல் முறையாக இந்துத் திருமணங் களை அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன் மூலம் சிறுபான்மை இந்துக்கள் தங்களுடைய திரு மணங்களைச் சட்டபூர்வாக பதிவு செய்யும் உரிமையைப் பெறு கின்றனர். இதற்கு முன் பாகிஸ்தானின் எந்த மாநிலத்திலும் இந்துக்களுக் கென்று தனியாகத் திருமணச் சட்டம் இல்லை. பாகிஸ்தானின் 190 மில்லியன் மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினர் முஸ்லிம் அல் லாதவர்கள். இந்துத் திருமணங்களை சட்ட பூர்வமாக்குவது குறித்து பல கட் டங்களில் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதனையொட்டி 2015ன் இந்துத் திருமண வரைவு சட்டத் துக்கு நாடாளுமன்றக் குழு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஆளும் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவுடன் இந்துத் திருமண மசோதா நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டு விரை வில் சட்டமாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிந்து மாநிலத்தில் முதல் முறை யாக இந்துத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இல்லாத காரணத்தால் கற்பழிப்பு, கட்டாயத் திருமணம் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கு வதாக இந்துப் பெண்கள் புகார் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டிலேயே சிந்து மாநிலத்தில் முதல் முறையாக இந்துத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!