பார்வையாளர்களைப் பாத்திரங்களாக்கிய உத்ரா

வனிதா மணியரசு

நவீ­னத்தை­யும் தொழில்­நுட்­பத்தை­யும் மேடை நாட­கத்­தி­லும் வித்­தி­யா­ச­மா­கப் பயன்­படுத்­த­லாம் என்பதை மெய்ப்­பித்­துள்­ளது உத்ரா 2016. ஈராண்­டு­களுக்கு ஒரு முறை நன்யாங் தொழில்­நுட்பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்றத்­தால் ஏற்பாடு செய்­யப்­படும் உத்ரா எனும் கலை­நி­கழ்ச்­சி­யின் மூன்றா­வது படைப்பு இம்­மா­தம் ஆறாம் தேதி மேடையேறியது. கதை, வசனம், நடி­கர்­கள், நட­னங்கள், ஆடைகள், ஒப்பனை, ஒளி, உப­க­ர­ணங்கள் என உத்ரா 2016ன் ஒவ்வோர் அங்க­மும் பார்வை­யா­ளர்­களைக் கவர்ந்­தி­ழுக்க, இரண்டரை மணி நேரம் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்கள் நாட­கத்தைக் கண்டு ரசித்­ததே மாண­வர்­களின் உழைப்­புக்­குக் கிடைத்த அங்­கீ­கா­ரம்.

புலிப்­பு­ரம் என்ற கற்பனை உல­கத்தை உரு­வாக்கி தொழில்­நுட்­பக் கூறு­க­ளான 'எல்.ஈ.டி' நடனம், 'டிரோன்' சாகசம், பாரம்ப­ரிய அம்­சங்க­ளான பரதம், நாட்­டுப்­புற கானா பாடல் போன்ற­வற்றை ஒரே மேடையில் அரங்­கேற்­றி­யது உத்ரா. "பார்வை­யா­ளர்­களைப் பாத்­தி­ரங்க­ளாக்­கிய உத்ரா நாடகப் படைப்­பில், நிகழ்ச்­சிக்­கு வந்தோர் புலிப்­பு­ரத்­தா­ரா­கவே வர­வேற்­கப்­பட்­ட­து­டன், நாட­கத்­தின் முடிவை நிர்­ண­யிக்­கும் பொறுப்­பும் அவர்­களி­டமே விடப்­பட்­டது," என்றார் உத்­ரா­வின் புத்­தாக்க இயக்­கு­நர் அருண் வாசுதேவ் கிருஷ்­ணன். கருணை, நீதி போன்ற ஆழ்ந்த கருக்­களை உள்­ள­டக்கி, மக்­களின் சிந்தனை­களும் உணர்ச்­சி ­களும் எழுச்சி காணும் தளமாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என்ற இலக்­கோடு செயல்­பட்­டி­ருந்தது இதற்கு வச­னங்கள் எழுதிய குழு. அழகிய தமிழ் நடையில் அமைக்­கப்­பட்ட வச­னங்கள் எளி­தா­கப் புரி­யக்­கூ­டி­யவை­யா­க­வும் இருந்தன.

உணர்ச்சிபூர்வமாக நடித்துப் பார்வையாளர்களைக் கவர்ந்த கதாபாத்திரங்கள். படம்: கர்ணன் பாலகிருஷ்ணன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!