ஜெர்மன்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஜெர்மன் போலிசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

ஜெர்மனியின் கொலோன் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது ஒரு கும்பல் நடத்திய பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நகரில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் பதிலுக்கு கூட்டத்தினர் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

அந்த மோதலில் மூன்று போலிஸ்காரர்களும் செய்தியாளர் ஒருவரும் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் 15 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!