புத்தாக்கம், தொழில்முனைப்பை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி

ஆசியான் வட்டாரத்தில் தொழில் முனைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்க உதவும் விதமாக சிங்கப்பூர், பேங்காக், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் சிறப்பு நிலையங்களை அமைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அந்த நகரங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் அந்த நிலையங்கள் அமையலாம் எனத் தெரிகிறது. இங்குள்ள அமெரிக்கத் திட்டங்களை ஒருங் கிணைக்க உதவி, அமெரிக்க வர்த்தக மூலதனத்தை ஆசியான் வட்டாரத்திற்குத் திருப்பி விடு வதையும் புதிய திட்டங்களை உருவாக்கும் பணியையும் அந்த நிலையங்கள் மேற்கொள்ளும். ஆசியான் வட்டாரத்துடனான அமெரிக்காவின் பொருளியல் ஈடுபாட்டை மேம்படுத்த இலக்கு கொண்டுள்ள 'ஆசியான்-யுஎஸ் கனெக்ட்' எனும் முயற்சியின் ஒரு பகுதியே இது.

இந்த நிலையங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை என்றாலும் அந்தத் திட் டத்தைப் பற்றிய சில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சன்னிலேண்ட்சில் நடந்த இரண்டு நாள் அமெரிக்கா= ஆசியான் உச்சநிலை மாநாட்டின் பொருளியல் அமர்வில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தத் தகவல்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கலிஃபோர்னியாவின் சன்னிலேண்ட்சில் நேற்று முன்தினம் (சிங்கப்பூர் நேரப்படி நேற்று) நடந்த அமெரிக்கா- ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரதமர் லீ சியன் லூங்கை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்றார். பின் இரு தலைவர்களும் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி உற்சாகமாகக் கையசைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!