தீயில் எரிந்து மாது இறப்பு: கொலையல்ல, நோக்கமற்ற மரணம்

ஆடவர் ஒருவர் தமது வழக்கறிஞரின் மனைவியை தலையில் சைக்கிள் சங்கிலி கொண்டும் பூட்டைக் கொண்டும் அடித்து அவரது மரணத்திற்கு காரணமாயிருந்து பின்னர் அந்த வழக் கறிஞரின் அலுவலகத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்த சம்பவத்தில் குற்றவாளி செய்தது கொலையல்ல, நோக்கமற்ற மரணத்தை விளைவித்தார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவிந்தசாமி நல்லய்யா, 71, என்ற ஆடவருக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்காக வாதாடினார் ரெங்கராஜு ரெங்கசாமி என்ற வழக்கறிஞர். இதில் திரு ரெங்கராஜுவுக்கு வழக்கறிஞர் கட்டணமாக வரவேண்டிய நிலுவைத்தொகை $38,000 என்று நீதிமன்றம் அறிந்தது. இத்தொகையை வசூலிக்கும் விதமாக கோவிந்தசாமியின் மகன், மகள் ஆகியோரின் சொத்துகளைச் சட்ட நீதியாக முடக்கும் முயற்சியில் அந்த வழக்கறிஞர் ஈடுபட்டார்.

இந்தக் கட்டண நிலுவையைத் தீர்க்க கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை கோவிந்தசாமிக்கு கால அவகாசம் தந்திருந்தார் திரு ரெங்கராஜு. இந்த வழக்கில் கோவிந்தசாமிக் கான தண்டனை குறித்து அரசு, தற்காப்புத் தரப்பு தங்களது வாதங் களை சமர்ப்பிக்க இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோவிந்தசாமிக் கான தண்டனை விதிக்கப்படும். அவர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை எதிர்நோக்குகிறார். அவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் பிரம்படி விதிக்க முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!