தேர்தல் கூட்டணி பற்றிப் பேச மனைவிக்கு விஜயகாந்த் தடை

சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக எந்தவிதக் கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என தனது மனை விக்கும் மைத்துனருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தடை விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைவதற்கு முன்னர், காரசாரமான கருத்துக் களை வெளியிட்டால் அது கூட்டணியைப் பாதிக்கும் என விஜய காந்த் கருதுவதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேமுதிகவைத் தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பல கட்சிகள் முனைப்பாக உள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி கூட்டணி குறித்து தேமுதிக தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜக உடனான கூட்டணிக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் விஜயகாந்தின் மைத்துனரான சுதீஷோ இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை எனில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது பிரேம லதாவின் விருப்பமாக உள்ளது. இதற்காக அவர் பாஜகவினருடனும் மக்கள் நலக் கூட்டணி பிரமுகர்களுடனும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை அடிக்கடி தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சுதீஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!