சொத்துகளைக் குவிக்கும் ஜெயா: கண்டிக்கும் வைகோ

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் தொடர்ந்து சொத்துக்களை வாங்கிக் குவிப்பது கண்டனத்துக் குரியது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். "கடந்த இரு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையில், தமிழ கமே தத்தளித்தது. அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக் காமல் முடங்கிக்கிடந்தது அதிமுக அரசு. இதற்கு வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள்.

"ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆயிரம் கோடி ரூபாயில் திரையரங்குகள் வாங்கியதாகத் தகவல் வந்துள்ளது. பொதுமக்க ளுக்கு நலத்திட்டங்களைச் செய் யாமல், இதுபோன்ற சொத்து களை வாங்கிக் குவிப்பது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது," என்றார் வைகோ. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தம்மிடம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடு வீர்களா? எனக் கேள்வி எழுப் பப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து மதிமுக ஆட்சி மன்றக் குழு முடிவு செய்யும் என்றார். "மோடி அரசு, படிம வாயுவை எடுக்க முனைப்புக் காட்டுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் நடக் கின்றன. இதைத் தடுக்காவிட்டால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக் கப்படுவர்," என்றார் வைகோ.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!