மிக மெதுவாகத் துவங்கி, நிதான மான வேகத்துடன் ஓடிக்கொண் டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக நல்ல பெயர் எடுத்தவர் இப்போது கதாநாயக னாக வலம் வருகிறார். 'நான்', 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்' வெற்றிகளுக்குப் பின் இவர் நடித்து மார்ச் 4ஆம் தேதி வெளிவரவிருக்கும் 'பிச்சைக்காரன்' படத்துக்கும் விநியோகிப்பாளர்கள், திரை யரங்க வட்டாரங்களில் நல்ல வரவேற்பு. படத்தைப் பார்த்தவர் களிடம் இருந்து வந்த முதல் தகவல் அறிக்கை படம் பிரமாதம் என்கிறது.
முதற்கட்ட அவஸ்தையை கடந்துவிட்டதையடுத்து, தணிக் கைத்துறையும் 'பிச்சைக்கார' னுக்கு 'யு' சான்றிதழ் கொடுத் திருக்கிறது. அது போதாதா? வரிவிலக்கு கிடைக்குமே! திரையரங்க உரிமையாளர் களின் மகிழ்ச்சி அங்கு ஆரம் பிக்க, மளமளவென பல திரை யரங்குகள் படத்தை வெளியிட முன்வந்துள்ளன. இதுவரைக்கும் 350 திரையரங்குகள் உறுதி யாகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனி, சேத்னா.