சத்யராஜ்: படத்தின் தலைப்பு முக்கியமல்ல

நடிகர்கள் ஜீவா, சிபிராஜ் நாயகர்களாக நடிக்க, நாயகியாக ஹன்சிகா நடித்துள்ள 'போக்கிரி ராஜா' படத்தின் பாடல்கள் வெளி யீட்டு விழா கோவையில் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சத்யராஜ் படத்தின் பாடல் குறுந்தகட்டை வெளியிட்டார். விழாவில் நடிகர் ஜீவா பேசும் போது, கோவையில் தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்ப தாகக் கூறினார். "ஒரு படத்தின் பெயரை விட கதாபாத்திரத்தின் பெயர் ரசிகர்களின் மனதில் நிற்க வேண்டும். அந்த வகையில்தான் 'வால்டர் வெற்றிவேல்' படத்தின் பெயரைவிட கதாபாத்திரத்தின் பெயரும் 'அமைதிப்படை' படத் தின் பெயரைவிட அமாவாசை என்ற கதாபாத்திரத்தின் பெயரும் பேசப்பட்டது. அதுதான் படத்தின் வெற்றிக்கு காரணம். அந்த வகையில் தான் இந்த 'போக்கிரி ராஜா' படத்தில் கூலிங்கிளாஸ் குணா என்ற பெயரில் சிபிராஜ் நடித்த கதாபாத்திரம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும்," என்றார் சத்யராஜ்.

'போக்கிரி ராஜா' படப்பிடிப்பில் பிருந்தா, ஹன்சிகா, ஜீவா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!