You are here

இணையத்தில் கஞ்சா வாங்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவர் கைது

கஞ்சா போதைப் பொருளை இணையப் பக்கம் ஒன்றிலிருந்து வாங்கியதாக சந்தேகத்தின் பேரில் 26 வயது சீன சிங்கப்பூரர் ஒருவரை மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். சுமார் 136 கிராம் கஞ்சா அடங்கிய பொட்டலம் ஒன்று குறித்து அப்பிரிவுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போதைப் பொருளை வாங்கிய அந்த ஆடவர் ஒரு மாணவர் என்றும் தமது அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக அவர் போலி அடையாளத்தைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவரின் இல்லத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது 11 ‘எல்எஸ்டி’ மாத்திரைகளுடன் கூடுதலான போதைப் பொருட்களும் சம்பந்தப்பட்ட கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணை தொடர்கிறது.