பொதுமக்களுக்கு என்டியுசி ஃபேர்பிரைஸ் தொண்டூழியம்

இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத் தின் மாதாந்திர தொண்டூழியத் திட்டங்களில் பொதுமக்கள் பங்கு பெறலாம். பொதுமக்களை மொத்தம் 500 மணி நேரம் தொண்டூழியப் பணியில் ஈடுபடுத்துவது இலக்கு. ரென் சி தாதிமை இல்லத்தில் நேற்று நடைபெற்ற தொண்டூழிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனத் தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சியா கியான் பெங் (படம்) இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு மொத்தம் 5,000 மணி நேரம் தொண்டூழியப் பணியை இலக்காக நிர்ணயித்து உள்ளது என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம். இதே இலக்கை கடந்த ஆண்டு சிங்கப்பூரின் SG50 கொண் டாட்டத்துக்காக வெற்றிகரமாக எட்டியது என்டியுசி ஃபேர்பிரைஸ். மரம் நடுதல், பொம்மைகள் செய்வது, உணவு பொட்டலங்கள் கட்டுவது முதியோரின் இல்லங் களைத் தூய்மைப் படுத்துவது போன்ற பலதரப்பட்ட நடவடிக்கை களில் என்டியுசி ஃபேர்பிரைஸ் ஊழியர்கள் பங்கேற்பர்.

இந்தத் திட்டங்கள் பொது மக்களையும் வெகுவாகக் கவர்ந்து பலர் தாங்களும் இத்திட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித் தனர். அதனைத் தொடர்ந்து இந்தத் தொண்டூழியத் திட்டங்கள் பொதுமக்களுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு நடவடிக்கை என ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். இந்தத் தொண்டூழிய நடவடிக்கைகளில் பொதுமக்கள் என்டியுசி ஃபேர்பிரைஸ் ஊழியர் களுடனும் மூத்த நிர்வாகி களுடனும் இணைந்து செயல் படுவார்கள். மேல் விவரங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும்.

ரென் சி இல்லத்தில் முதியவர் ஒருவருக்குச் சீனப் புத்தாண்டு அன்பளிப்பு கொடுக்கும் திரு சியா கியான் பெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!