‘பி’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்வு

'பி' பிரிவு வாகனங்கள், அதாவது 1,600 சிசிக்கு மேல் உள்ள கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் எதிர்பார்க்கப்பட்டது போல நேற்று உயர்ந்தது. அது 21.7% அதிகரித்து $46,970 ஆனது. கடந்த முறை நடந்த சிஓஇ ஏலக்குத்தகையில் 'பி' பிரிவு கார்களுக்கான சிஓஇ கட்டணம் ஆறாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி கண்டு $38,610 ஆக சரிந்தது. 'ஏ' பிரிவு வாகனங்கள், அதாவது 1,600 சிசிக்குக் குறைவான கார்களுக்கான சிஓஇ கட்டணம் 7.8% சரிந்து $43,000 ஆனது. பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் 2.3% அதிகரித்து $45,009 ஆனது. மோட்டார்சைக்கிள்களுக்கான ('டி' பிரிவு) சிஓஇ கட்டணம் 2.3% சரிந்து $6,353 ஆனது. 'சி' பிரிவு வர்த்தக வாகனங் களுக்கான சிஓஇ கட்டணம் 0.73 சரிந்து $45,001 ஆனது. கடந்த முறை சிஓஇ கட்டணங் களில் சரிவு ஏற்பட்டதால் பலர் வாகனங்கள் வாங்குவார்கள் என்றும் அதனால் இம்முறை கட்டணங்கள் அதிகரிக்கும் எந்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!