அமைச்சர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

மதுரை: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலிசார் கைது செய்து உள்ளனர். மதுரை பைபாஸ் ரோட்டை ஒட் டியுள்ள சம்மட்டிபுரத்தில் கூட் டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் சட்டமன்ற அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பின்னிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் திடீரென்று பெட்ரோல் குண்டு ஒன்றையும் நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் அந்த அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இவற்றில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அலுவல கத்தின் கதவு சிதறி உடைந்து சேதம் அடைந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மதுரை மதிச்சியம் பனகல்ரோட்டில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இரவு நேரத்தில் உள்ளே ஆட்கள் இன்றி அலுவலகங்கள் பூட்டிக் கிடந்ததால் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

குண்டுகள் வெடித்த அமைச்சரின் அலுவலகத்தில் தடயங்களைச் சேகரிக்கும் அதிகாரிகள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!