சீனிவாசனை நியமிக்க எதிர்க்கட்சி முட்டுக்கட்டை

வா‌ஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்படும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது. இந்தியாவின் சண்டிகரில் பிறந்த ஸ்ரீ சீனிவாசனின், 48, பெற்றேர், 1960களில் அமெரிக் காவுக்குப் புலம்பெயர்ந்தனர். சீனிவாசனின் தாயார் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவிலேயே பட்டப் படிப்பை முடித்து கீழ்நீதி மன்றத்தில் தனது வாழ்க்கையைத் தெடங்கிய சீனிவாசன் இப் பேது அந்நாட்டின் இரண்டாவது பெரிய நீதிமன்றமான கொலம் பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

இதன் மூலம் அந்தப் பதவிக்கு வந்த முதல் அமெரிக்க இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். சீனிவாசன், அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் முதன்மைத் துணை தலைமை வழக்கறிஞராகவும் (செலிசிட்டர் ஜெனரல்) பணியாற்றி திருமண சட்ட வழக்கை திறம்பட நடத்தி யவர் என பெயரெடுத்தவர். ஸ்ரீசீனிவாசன் நியமனத்தைத் தடுக்கும் குடியரசுக் கட்சியினரை அதிபர் ஒபாமா சாடினார். இத்தகைய நியமனத்தைச் சாத்தியமாக்கும் கடமை குடி யரசுக் கட்சியினருக்கும் உண்டு என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!