தென்சீனக் கடலில் சீனா நிறுத்திய ஏவுகணைகள்

தைப்பே: தென் சீனக் கடலில் சர்ச்சைக்கு இடமான தீவுகள் ஒன்றில் தரையில் இருந்து மேலே பாயும் ஏவுகணையைச் சீனா நிறுத்தி வைத்துள்ளதாக தைவானும் அமெரிக்காவும் அபாய சங்கு ஊதியுள்ளன. அந்தப் பகுதியில் அமைதியைக் கட்டிக்காக்கும்படி அமெரிக்க அதிபர் ஒபாமா வலுயுறுத்திவந்த போதிலும் சீனாவின் இந்தச் செயலால் பதற்றம் கூடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஏவுகணை 'ஊடி' என்ற தீவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தீவு கடந்த 40 ஆண்டு காலமாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றாலும் அந்தத் தீவு தன்னுடையது என்று தைவானும் வியட்நாமும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. "தென் சீனக் கடலில் அக் கறைக்கு உரிய தரப்புகள் அமைதி காக்கவேண்டும். பதற்றத்தை ஏற் படுத்தும் காரியங்களைச் செய்யக் கூடாது," என்று தைவானின் தற் காப்பு அமைச்சின் பேச்சாளர் ஜெனரல் லு கூறினார். சீனா ஏவுகணை நிறுத்தி வைத்திருப்பதை அமெரிக்காவின் தற்காப்பு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

தென் சீனக் கடலில் பிரச்சினைக்குரிய ஸ்பார்ட்லி தீவுகளில் மேபினியில் சீனாவின் கட்டுமானத்தைக் காட்டும் இந்தப் படம் இம்மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. படம்: ஈபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!