நாடாளுமன்ற மருந்தக மருத்துவ அதிகாரி ஒரு மாதமாகக் காணவில்லை

ஈப்போ: மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மருந்தகத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்த மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் ஒரு மாதமாகக் காணவில்லை. திருமணமாகாத 50 வயது சுகுமாறன், கடைசியாக ஜனவரி 3ஆம் தேதி தமது வயதான பெற் றோர்களை சந்தித்துள்ளார். அதன் பிறகு கோலாலம்பூரில் உள்ள வீட்டுக்கு அவர் திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டம் நடை பெறும்போது அவர் மருந்தகத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு மாதமாக அவர் காணவில்லை என்று சில நண்பர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் போலிசில் புகார் அளித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் கடைசியாக சுகுமாறனைப் பார்த்ததாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்றும் திரு குலசேகரன் தெரி வித்தார். "எனக்கு அவர் நல்ல நண்பர், குடும்ப மருத்துவர். அவரது வய தான பெற்றோரிடமும் நண்பர் களிடமும் பேசினேன். அவரது இருப்பிடம் தெரியவில்லை," என்றார் அவர். "போலிசில் புகார் அளித்துள் ளோம். சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் இது குறித்து தெரிவித் துள்ளேன்," என்று போலிசில் புகார் அளித்த பிறகு செய்தியாளர் களிடம் திரு குலசேகரன் கூறிய தாக 'தி ஸ்டார் ஆன்லைன்' செய்தி குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!