பேரவை: எதிர்க்கட்சியினர் கூண்டோடு வெளிநடப்பு

சென்னை: முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர அனு மதிக்கப்படாததால், சட்டப்பேரவை யில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்து வெளிநடப்புச் செய்தனர். திமுகவினர் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதால், கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நேற்று சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுக உறுப்பினர் ஸ்டாலினுடைய உறவினரின் பெயரைக் குறிப்பிட்டார்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பதாகவும் குற்றம்சாட்டினர். அப்போது ஸ்டாலின் ஏதோ பேச முற்பட்டபோது, சபாநாயகர் அனுமதி மறுத்தார். மேலும் ஸ்டாலின் கூறியதை அவைக் குறிப்பி லிருந்தும் நீக்கினார். இதனால் பேரவையில் அமளி நிலவியது. இதையடுத்து திமுவி னரைக் கூண்டோடு வெளியேற் றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன், முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேரவையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!