விஜயகாந்த் வருவார்: இளங்கோவன் நம்பிக்கை

சென்னை: திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில் தேமுதிகவும் நிச்சயம் இணையும் எனத் தாம் நம்புவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், கூட்டணி குறித்த தேமுதிகவின் முடிவை விஜயகாந்தே நேரடியாக அறிவித் தால் மட்டுமே ஏற்கமுடியும் என்றும் அக்கட்சியைச் சேர்ந்த பிறர் கூறுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் கூறினார். வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே இந்தக் கூட்டணி அமைந்தது

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி யில் தேமுதிகவையும் எப்படியாவது இணைக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. எப்படியும் விஜய காந்தை கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க முடியும் எனத் திமுகவும் காங்கிரசும் நம்பிக்கொண்டிருக் கும் நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் அண் மைய பேட்டி இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. "பல்வேறு ஊழல்களுக்குக் காரணமான காங்கிரசுடன் கூட் டணி அமைத்தது ஏன்? என்று திமுக தலைவரிடம்தான் கேட்க வேண்டும்," எனப் பிரேமலதா கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!